செய்திகள்
மயிலாடுதுறை அருகே மணல் கடத்தல் - வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை அருகே மாப்படுகை சாலை காவிரி ஆற்றங்கரை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சோழம்பேட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்த அமிர்தராஜ் (வயது22) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக டிராக்டர் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.