செய்திகள்
75 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்காக சாத்தனூர் அணை திறப்பு
சுற்றுலா பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.
தண்டராம்பட்டு:
சாத்தனூர் அணை மூடப்பட்டதால் அரசுக்கு ரூ.15 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு சுற்றுலா பயணிகளை நம்பி இருந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் சாத்தனூர் அணையை சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதைத்தொடர்ந்து 75 நாட்களுக்கு பிறகு நேற்று காலை சாத்தனூர் அணை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க திறக்கப்பட்டது. இதுகுறித்து உதவி பொறியாளர் சிவக்குமார் கூறுகையில் சுற்றுலா பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
நீச்சல் குளத்தில் குளிக்கவோ, படகு சவாரி செய்யவோ அனுமதி இல்லை என்று கூறினார். 75 நாட்களுக்குப் பிறகு சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க அனுமதித்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.