செய்திகள்
கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் 279 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-29 15:49 IST   |   Update On 2021-06-29 15:49:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலித்தும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலித்தும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மட்டும் மாவட்டத்தில் 1,847 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 330 பேருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 2,177 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று கொரோனா தடுப்பூசியை சுகாதாரத்துறையினர் செலுத்தி வருகின்றனர். அதன்படி மாவட்டத்தில் தடுப்பூசி போட தகுதி வாய்ந்த 3,444 மாற்றுத்திறனாளிகளில், இதுவரைக்கும் 279 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,05,373 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 1,540 கோவிஷீல்டு தடுப்பூசியும், 680 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.

Similar News