செய்திகள்
கீழ்பென்னாத்தூரில் மோட்டார்சைக்கிள் மோதி காயமடைந்த முதியவர் உயிரிழப்பு
கீழ்பென்னாத்தூரில் மோட்டார்சைக்கிள் மோதி காயமடைந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூரில் உள்ள கலைஞர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 72). இங்குள்ள வணிக வளாகத்தில் டெய்லர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கடைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ராமச்சந்திரன் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.