செய்திகள்
தற்கொலை

கீழ்பென்னாத்தூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

Published On 2021-06-25 15:06 IST   |   Update On 2021-06-25 15:06:00 IST
கீழ்பென்னாத்தூர் அருகே என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கழிக்குளம் கொல்லை கொட்டாயில் வசிப்பவர் தசரதன். இவரது மகன் பாலாஜி (வயது 22), பண்ருட்டியில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பாலாஜி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News