செய்திகள்
மருவத்தூர் புதுகாலனியில் பழுதடைந்த மின் மோட்டாருடன் உள்ள குடிநீர் தொட்டியை படத்தில் காணலாம்.

மருவத்தூரில் மின்மோட்டார் பழுதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

Published On 2021-06-19 12:20 GMT   |   Update On 2021-06-19 12:20 GMT
மருவத்தூரில் மின்மோட்டார் பழுதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தை அடுத்த மருவத்தூர் ேபாலீஸ் நிலையம் அருகே உள்ள புது காலனியில் சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்து, அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த குடிநீர் தொட்டி புது காலனியில் உள்ள மக்களும், மருவத்தூர் கிராம மக்களும் பயன்படும் வகையில் இருந்தது. இந்நிலையில் இந்த தொட்டியின் மின் மோட்டார் பழுது அடைந்தது. 3 மாதங்களுக்கு மேலாகியும் மின் மோட்டார் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதோடு, வேறு பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், இதுவரை சரி செய்யப்படவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் பேரளி ஊராட்சி நிர்வாகம் பழுதாகி உள்ள மின் மோட்டாரை உடனடியாக சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News