செய்திகள்
அபராதம்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2021-06-15 12:58 GMT   |   Update On 2021-06-15 12:58 GMT
மளிகை மற்றும் காய்கறி கடைகளில் முககவசம் அணியாமல் அலட்சியமாக வேலை பார்த்த 5 பேருக்கு தலா 200 வீதம் 1,000 அபராதம் விதித்தனர்.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.நேற்று முதல் பலசரக்கு, மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி நாகையில் வருவாய்துறை அதிகாரி கீர்த்திவாசன் தலைமையில் போலீசார் கொண்ட பறக்கும் படையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மளிகை மற்றும் காய்கறி கடைகளில் முககவசம் அணியாமல் அலட்சியமாக வேலை பார்த்த 5 பேருக்கு தலா 200 வீதம் 1,000 அபராதம் விதித்தனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி டீக்கடை, பாத்திரக்கடை, சலூன் கடைகள் உள்ளிட்ட கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ததாக 4 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா 500 வீதம் 2,000 அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News