செய்திகள்
ப.சிதம்பரம்

மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்- ப.சிதம்பரம்

Published On 2021-06-15 15:31 IST   |   Update On 2021-06-15 15:31:00 IST
நாடு முழுவதும் பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ராஜா சென்று மதுக்கடைகளை மூட சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த பின் முன்னாள் மத்திய மந்திரி  ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

துரதிர்ஷ்டவசமாக நாடு முழுவதும் மது அருந்தும் பழக்கம் பரவி விட்டது. தமிழ்நாடு அதற்கு விலக்கல்ல.  நான் மது அருந்துவது கிடையாது. அதனால் மது அருந்துபவர்களை தீயவர்கள் என்றும் சொல்ல முடியாது.

 


மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். இதனை யாரும் மறுக்க முடியாது. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டுமென்றால் மதுக் கடைகளை திறந்துதான் ஆக வேண்டும்.

இதையும் படியுங்கள்.... மதுக்கடைகள் திறப்பை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம்- ராமதாஸ் அறிவிப்பு

நாடு முழுவதும் பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ராஜா சென்று மதுக்கடைகளை மூட சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும். அதன் பின்பு தமிழகத்தில் மதுக் கடைகளை மூட சொல்லலாம்.

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்திற்கு காரணமே பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்தான். பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் கட்டுமான பொருட்களின் விலையும் குறைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News