செய்திகள்
கோப்பு படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

Published On 2021-06-13 20:27 IST   |   Update On 2021-06-13 20:27:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 38 வயது ஆண், 50 வயது ஆண், 70 வயது மூதாட்டி ஆகிய 3 பேர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 266 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 369 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 36 ஆயிரத்து 888 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 34 ஆயிரத்து 299 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Similar News