செய்திகள்
கைது

வடகாடு அருகே தண்ணீர் பாட்டிலில் சாராயம் விற்ற வாலிபர் கைது

Published On 2021-05-21 18:46 IST   |   Update On 2021-05-21 18:46:00 IST
வடகாடு அருகே தண்ணீர் பாட்டிலில் சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:

வடகாடு அருகேயுள்ள கருக்காகுறிச்சி பகுதியில் எரி சாராயம் விற்பனை நடைபெறுவதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருக்காகுறிச்சி தெற்கு தெரு காத்தாயி அம்மன் கோவில் அருகே 2 லிட்டர் எரிசாராயத்தை தண்ணீர் பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது 25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News