செய்திகள்
ஊரடங்கை மீறி அன்னவாசலில் சுற்றித்திரிந்த 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
அன்னவாசலில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் போலீசார் தடுப்பு அமைத்து வாகன நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரூள்மொழி அரசு உத்தரவின்பேரில், கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசின் ஊரடங்கை பொதுமக்கள் கடைப் பிடிக்கின்றார்கள் என்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிந்தனர். இந்நிலையில், நேற்று அன்னவாசல் பகுதிகளில் ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றித்திரிந்த 50 இருசக்கர வாகனங்களை அன்னவாசல் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னவாசலில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் போலீசார் தடுப்பு அமைத்து வாகன நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.