செய்திகள்
அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த போது எடுத்தபடம்.

நாகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்துக்கு சீல் - நகராட்சி அதிகாரிகள் அதிரடி

Published On 2021-03-27 12:20 IST   |   Update On 2021-03-27 12:20:00 IST
நாகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை நகராட்சி எல்லைக்குட்பட்ட நீலா மேலவீதியில் உள்ள தனியார் திருமண மண்டப கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் ஒலி எழுப்பப்படுவதும், போதுமான வாகன நிறுத்தும் இடம் இல்லாமலும், அனுமதி இன்றி கட்டபட்டிருப்பதாக ஒருவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பின்படியும், நகராட்சிகள் சட்டப்பிரிவின் படியும், கட்டிடத்தை பூட்ட வேண்டும் என அறிவிப்பு உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.

இருந்தும் தொடர்ந்து அந்த திருமண மண்டப கட்டிடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

இது சட்டத்திற்கு எதிராகவும், பசுமை தீர்ப்பாயத்தை அவமதிக்கும் செயலாகும் கருதப்படுகிறது. எனவே பசுமை தீர்ப்பாய தீர்ப்பின்படி நேற்று நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமையில் நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், நகரமைப்பு ஆய்வாளர்கள் செல்வராஜ், செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் போலீசார் பாதுகாப்புடன் தனியார் திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News