செய்திகள்
காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் கர்ப்பிணி தற்கொலை - காதலன் கைது
கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதால் மனம் உடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு:
செய்யாறு தாலுகாவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25). இவர், சிப்காட்டில் பணிபுரியும் 20 வயது இளம் பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்போது ராஜேஷ், இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதனையடுத்து இளம்பெண், காதலனிடம் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த ராஜேஷ் இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.