செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2021-03-23 23:22 IST   |   Update On 2021-03-23 23:22:00 IST
ராமநத்தம் அருகே பணம் வைத்து சூதாடியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம்:

ராமநத்தம் அருகே கொரக்கவாடி அம்மாகுளம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும் அவர்களில் 3 பேரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திட்டக்குடியை சேர்ந்த பத்மநாபன் மகன் சூப்பர் சேந்தன் (வயது 25), உளுந்தூர்பேட்டை பஷீர் மகன் ஜமால் முகமது (38), கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜலகண்டபுரம் மாதேசன் மகன் முருகவேல் (48) என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ராமநத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் 6 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டர் மற்றும் ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகவேல் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 12 பேரை தேடி வருகின்றனர்.

Similar News