செய்திகள்
வாகன சோதனை

ஆலங்குடி அருகே ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

Published On 2021-03-23 18:37 IST   |   Update On 2021-03-23 18:37:00 IST
ஆலங்குடி அருகே எரிச்சி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
ஆலங்குடி:

ஆலங்குடி அருகே எரிச்சி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்தவர் ரூ.2 லட்சம் பணம் வைத்து இருந்தார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலங்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் அக்பர் அலியிடம் ஒப்படைத்தனர்.

Similar News