செய்திகள்
பாதிரிக்குப்பத்தில் அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காட்சி

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் - அமைச்சர் எம்.சி.சம்பத் தீவிர பிரசாரம்

Published On 2021-03-22 20:15 IST   |   Update On 2021-03-22 20:15:00 IST
இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று கடலூர் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் தீவிர பிரசாரம் செய்தார்.
கடலூர்:

கடலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் மீண்டும் போட்டியிடு கிறார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். பா.ம.க., , பாரதீய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

அதன்படி நேற்று அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் பாதிரிக்குப்பம் அரசமர விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து பாதிரிக்குப்பம் மாடவீதி, சாம்பசிவம் நகர், சண்முகாநகர், குலசேகரம்மாள்நகர், தங்கராசு நகர், சுந்தரிநகர், ருக்மணிநகர், இந்திராநகர், பாதிரிக்குப்பம் காலனி, குறிஞ்சிநகர், நத்தவெளிரோடு, ஜெயராம்பிள்ளைநகர், கூத்தப்பாக்கம் முருகன்கோவில் தெரு, ராமநாதன்நகர், பெரியார்நகர், பாரதியார்நகர் என பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம் பகுதியில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.

தனக்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். முன்னதாக அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மேள தாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் அ.தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் வழங்குவோம்.கல்விக்கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே கொண்டு வரப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்தார்.

அவருடன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் காசிநாதன், மாவட்ட பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஸ்வரி விஜயராயலு, கிரிஜா செந்தில்குமார், வேல்முருகன், பா.ம.க. மாவட்ட செயலாளர் கோபிநாத், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மணிகண்டன், பாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Similar News