செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாவிட்டால் அபராதம்- பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

Published On 2021-03-20 18:38 IST   |   Update On 2021-03-20 18:38:00 IST
பொதுமக்கள் வெளியே வரும்போது முககவசம் அணியவேண்டும், இல்லையென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தெரிவித்தார்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவின்பேரில், வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோவன் அறிவுரையின்படி சேத்துப்பட்டு பேரூராட்சியில் வீட்டில் இருந்து  வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே முககவசம் அணியாமல் வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் வெளியே வரும்போது முககவசம் அணியவேண்டும், இல்லையென்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சேத்துப்பட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தெரிவித்தார்.

Similar News