செய்திகள்
கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்.

ராமநத்தம் அருகே மான் கறி விற்பனை- 2 பேர் கைது

Published On 2021-02-15 19:27 IST   |   Update On 2021-02-15 19:27:00 IST
ராமநத்தம் அருகே மான் கறி விற்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநத்தம்:

ராமநத்தம் அருகே தி.ஏந்தல் கிராமத்தில் மான்கறி விற்பனை செய்யப்படுவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மான் கறி விற்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 40) என்பதும், அவரிடம் மான் கறியை கொடுத்தது பெண்ணாடம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த பிரபு (33) என்பதும் தெரிந்தது.

இதையடுத்து பிரபுவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தி.ஏந்தல் வனப்பகுதி்க்குள் புகுந்து மான் வேட்டை நடத்தியதும், பின்னர் அதன் கறியை விற்பனைக்காக ராமசாமியிடம் கொடுத்ததும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து பிடிபட்ட 2 பேரையும் போலீசார் விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரவி, வனவர் சிவகுமார், வனக்காப்பாளர் சங்கர், வனக்காவலர் சிவானந்தம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்ட 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 கிலோ மான்கறியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News