செய்திகள்
அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
அறந்தாங்கி அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் உள்ள தியேட்டர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரேஷ்மா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஞ்சாத்தி விடத்திரான்வயலை சேர்ந்த விக்ரமன் (வயது 32) லாட்டரி சீட்டுகளை விற்ற போது அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1,500, செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.