செய்திகள்
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி வருகிற 14-ந்தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். உபரிநீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3,37,717 எக்டேர் (8.30 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.
இத்திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்போவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் திட்டப்பணிக்காக புதுக்கோட்டை குன்னத்தூரில் இருந்து கவிநாடு வெள்ளாறு வரை 52 கி.மீ.க்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்க வேண்டுமென முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைப்பதுடன், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இத்தகவலை தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மதயானைப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
அதன்பலனாக தற்போது அந்த திட்டம் நிறைவேற போகிறது. இதையடுத்து முதற்கட்டமாக இந்த திட்டத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.300 கோடி நிதியை ஒதுக்கினார். அதன் மூலம் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலங்கள் கையப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 14-ந்தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம் வறட்சியான மாவட்டமாக இருந்த புதுக்கோட்டை பசுமையான மாவட்டமாக மாறும். 100 ஆண்டு கால கனவுத்திட்டம் தற்போது நிறைவேற உள்ளது. இதற்காக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
காவிரி-குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்பட உள்ளதையடுத்து புதுக்கோட்டை மற்றும் 7 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.