செய்திகள்
கோப்புபடம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 6-வது நாளாக மறியல்

Published On 2021-02-08 16:29 IST   |   Update On 2021-02-08 16:29:00 IST
புதுக்கோட்டை அருகே கோரிக்கைகளை வலியுறித்தி அரசு ஊழியர்கள் 6-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கோரியும், அரசுத்துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும், அரசுத்துறையில் பணியாற்றிவரும் சத்துணவு, அங்கன்வாடி மற்றும் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கிராமப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் 6-வது நாளான நேற்று மாவட்ட துணைத் தலைவர் குமரேசன் தலைமையில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் ேபாராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Similar News