செய்திகள்
வழக்கு பதிவு

அன்னவாசல் அருகே சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-02-06 20:12 IST   |   Update On 2021-02-06 20:12:00 IST
அன்னவாசல் அருகே சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

அன்னவாசல் அருகே உள்ள லெக்கணாப்பட்டி பகுதியில் அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, லெக்கணாப்பட்டி பகுதியில் உள்ள பொது இடத்தில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 46) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News