செய்திகள்
கோப்புப்படம்

வருகிற 31-ந் தேதி 1,611 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Published On 2021-01-24 23:39 IST   |   Update On 2021-01-24 23:39:00 IST
கடலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி 1,611 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இதில் 2½ லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
கடலூர்:

போலியோ நோயை தடுப்பதற்காக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் இம்முகாம் வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

Similar News