செய்திகள்
கர்ப்பிணி உள்பட 20 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் 20 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஆந்திரா, ஐதராபாத், வேலூரிலிருந்து என்.எல்.சி.வந்த 5 பேர், பரங்கிப்பேட்டையை சேர்ந்த கர்ப்பிணி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
இதேபோல் சிதம்பரத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வரை 24ஆயிரத்து 239 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். நேற்று ஒரே நாளில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.கொரோனா பாதித்த 104 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 23 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.444 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.