செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
குடோன் அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் முதுநகர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் ஆலைக்கு சொந்தமான குடோன் அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பச்சையாங்குப்பத்தை சேர்ந்த ஜெகன் (வயது 30), மதிமீனாட்சி நகர் ரகு (40), சான்றோர் பாளையம் கோபால் (28), அப்பா பள்ளி தெரு தல்பாதர்( 33), பீமாராவ் நகர் நாகப்பன்( 42), உசேன் மரைக்காயர்( 31), சோனகர் தெரு நாசர் அலி (47), சிராஜூதீன்( 48), பள்ளிவாசல் தெரு பாஷா (54), சோனாங்குப்பம் ரமேஷ் (44 ) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 32ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். சூதாடிய கும்பலை பிடித்த கடலூர் முதுநகர் போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி பாராட்டி வெகுமதி வழங்கினார்.