செய்திகள்
கல்லல் அருகே சரக்கு வாகனத்தில் பேட்டரி திருடியவர் கைது
கல்லல் அருகே சரக்கு வாகனத்தில் பேட்டரி திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லல்:
கல்லல் அருகே வெற்றியூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். 2 சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 25-ந்தேதி வீட்டு முன் நிறுத்தி இருந்த 2 வாகனத்தில் இருந்தும் பேட்டரி, டீசல், ரேடியோ திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் கல்லல் போலீசார் வழக்குபதிவு செய்து புலி கண்மாயை சேர்ந்த காளிமுத்து மகன் ரமேஷ் என்பவரை கைது செய்தனர். பேட்டரி திருடியவர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசில் சிக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.