செய்திகள்
அன்னவாசல் அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் திருடிய தொழிலாளி கைது
அன்னவாசல் அருகே ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையை சேர்ந்தவர் சாலைமுருகன். ஒப்பந்ததாரரான இவர் அதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். இங்கு கட்டைக்கோண்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவர் தச்சுவேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சாலைமுருகன் வீட்டை பூட்டிவிட்டு மதுரை சென்றார். பின்னர் மீண்டும் அவர் வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, 2 தங்க சங்கிலி, ஒரு மோதிரமும் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்து சாலைமுருகன் அன்னவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த சந்தேகத்தின் பேரில் சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.