செய்திகள்
கைது செய்யப்பட்ட முகிலனையும், பறிமுதல் செய்யப்பட்ட அரிவாளையும் படத்தில் காணலாம்.

பொன்னமராவதி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டி 5¾ பவுன் சங்கிலி பறிப்பு- ஒருவர் கைது

Published On 2020-12-24 13:59 IST   |   Update On 2020-12-24 13:59:00 IST
பொன்னமராவதி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டி 5¾ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கோவனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சாந்தி. நேற்று மாலையில் இவரது வீ்ட்டுக்கு 5 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டு திடீரென்று சாந்தியின் தலையில் அரிவாளால் வெட்டினர்.

பின்னர் அவர்அணிந்து இருந்த 5¾ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து 5 பேரில் ஒருவரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி சென்றனர். தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த முகிலன் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். காயம் அடைந்த சாந்தியை பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் தப்பி சென்ற மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த கும்பல் ஏற்கனவே நோட்டமிட்டு இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 பேர் கொண்ட கும்பல் பெண்ணை வெட்டி சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News