செய்திகள்
மயிலாடுதுறை அருகே காரில் கடத்தி வந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல்- டிரைவர் கைது
மயிலாடுதுறை அருகே காரில் கடத்தி வந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்த போலீசார் கார் டிரைவரை கைது செய்தனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே திருமங்கலம் பகுதியில் பாலையூர் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நிறுத்தாமல் வேகமாக சென்ற காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். சோதனையில் அந்த காரில் 500 லிட்டர் கள்ள சாராயம் இருந்ததும், அதனை காரைக்காலில் இருந்து கும்பகோணம் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து காரையொட்டி வந்த திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடி அகரமேடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக் (வயது28) என்பவரை கைது செய்து, பாலையூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.