செய்திகள்
லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: விபத்தில் 4 பேர் படுகாயம்
தவளக்குப்பம் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி ஒரு லாரி நேற்று நள்ளிரவு கிரஷர் மணலை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அதேபோல் கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. தவளக்குப்பம் அருகே வந்போது லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் லாரி சாலையில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த மணல் நடுரோட்டில் கொட்டியது. அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போக்குவரத்து போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.