செய்திகள்
கறம்பக்குடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் மீது வழக்கு
கறம்பக்குடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் கறம்பக்குடி காசிம் கொல்லை, சூரக்காடு, ஆத்தியடிப்பட்டி, கெண்டையன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த சேட்டு (வயது 58), ரவி (42), முகமது இக்பால் (40), இதயத்துல்லா ( 60), கார்த்திக் (27), திருமண நாதன் (22), பாலச்சந்தர் (47) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 70 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.