செய்திகள்
கோப்பு படம்.

விருதுநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று

Published On 2020-12-16 12:56 IST   |   Update On 2020-12-16 12:56:00 IST
விருதுநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருபவர் சம்பத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனோ மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அதன் பிறகு அவர் வழக்கம்போல் பணியில் இருந்து வந்தார்.

நேற்று விருதுநகர் மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்ததால் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவரது மருத்துவ பரிசோதனை முடிவு வெளியானது. இதில் இன்ஸ்பெக்டர் சம்பத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக விருது நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் உள்ள மற்ற காவல் துறையினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மேலும் பாதுகாப்பு பணியின் போது அவர் அருகே நின்றவர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

Similar News