செய்திகள்
தேங்கியுள்ள மழைநீரில் பொதுமக்கள் நடந்து செல்வதை படத்தில் காணலாம்.

தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-12-15 18:09 IST   |   Update On 2020-12-15 18:09:00 IST
கரியாப்பட்டினத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் கவுண்டர் காடு மேற்கு பகுதியில் 60 குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகளை சுற்றி வயல்களும் உள்ளன. நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த மழையினால் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும், வயல்களிலும் மழை நீர் தேங்கியது.

அப்பகுதியில் உள்ள தார் சாலைகளில் 2 அடி தண்ணீர் தேங்கிய நிலையில் அப்பகுதி மக்கள் பொக்லின் எந்திரம் மூலம் தார் சாலையை வெட்டி தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தண்ணீர் வடியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்து தண்ணீர் வடிய ஏற்பாடு செய்தனர். .

ஆனாலும் தண்ணீர் வடியவில்லை. மழை விட்டு ஒரு வாரமாகியும், அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு தண்ணீரில் தான் நடந்து செல்கின்றனர். வீடுகள் மற்றும் வீட்டின் கழிவறைகளை சுற்றியும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வடியாததால் இப்பகுதி மக்கள் தண்ணீரை வடியவைக்க வாய்க்கால் வெட்டும் பணிக்கு சென்றனர். தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் முருகு, வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிசெல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தண்ணீர் வடிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News