செய்திகள்
திருமருகல் அருகே ஏனங்குடி ஆலமரத்தடியில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

திருமருகல் அருகே வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-13 14:12 IST   |   Update On 2020-12-13 14:12:00 IST
திருமருகல் அருகே வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஆலமரத்தடியில் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் யூசுப்தீன் முன்சீப், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் பகுரூதின், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி தமிமுன் அன்சாரி, திட்டச்சேரி பேரூர் கழக செயலாளர் இப்ராஹிம், மாவட்ட தொழிற்சங்க துணை அமைப்பாளர் சேக்பரிது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌‌ஷங்கள் எழுப்பபட்டன. முடிவில் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் நி‌ஷாத் நன்றி கூறினார்.

Similar News