செய்திகள்
வாணாபுரம் பகுதியில் உளுந்து பயிரிடுவதில் ஆர்வம்காட்டும் விவசாயிகள்
வாணாபுரம் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் உளுந்து பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
வாணாபுரம்:
வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான மழுவம்பட்டு, பெருந்துறை பட்டு, குங்கிலிய நத்தம், பேராயம்பட்டு, சின்ன கல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, சு.வாழாவெட்டி, கல்லேரி, சதாகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் கரும்பு, நெல், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பெரும்பாலும் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உளுந்து பயிரிடப்பட்டு அதனை பராமரித்து வருகின்றனர். பெரும்பாலும் மாற்றுப் பயிராக உளுந்து பயிரை அதிகளவில் பயிரிடப்பட்டு வரும் நிலையில் தற்போது உளுந்து பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.