செய்திகள்
கோப்புபடம்

ஈரோட்டில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2020-12-07 19:53 IST   |   Update On 2020-12-07 19:53:00 IST
ஈரோடு வைராபாளையம் நால்ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் நேதாஜிரோடு பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்ததாக பி.பி.அக்ரஹாரம் நஞ்சப்பா நகரை சேர்ந்த சவுகத்அலி (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 12 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஈரோடு வைராபாளையம் நால்ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக சேலம் மாவட்டம் எடப்பாடி கவுண்டம்பட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த செல்வம் (42) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

Similar News