செய்திகள்
கைது

தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

Published On 2020-12-05 17:21 IST   |   Update On 2020-12-05 17:21:00 IST
தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:

பவானியை அடுத்த சித்தோடு ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). கட்டிட தொழிலாளி. நேற்று அவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென முருகேசனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து சித்தோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் சித்தோடு ராயபுரம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், அவர் முருகேசனிடம் பணம் கேட்டு மிரட்டியதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Similar News