செய்திகள்
வேலூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி
வேலூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் வண்ணார்புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). பூக்கட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வல்லண்டராமம் பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக ஆறுமுகம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயம் அடைந்த ஆறுமுகம் உயிரிழந்தார்.
தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரையும் அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர்.