செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகே உள்ள கர்னூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகலூர் அருகே உள்ள முத்தாலியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (35). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொங்கு செட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). கார் டிரைவர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த அவர் காடுமுச்சந்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.