செய்திகள்
அமைச்சர் நிலோபர் கபில்

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று வழங்க கால நீட்டிப்பு- அமைச்சர் தகவல்

Published On 2020-09-06 07:02 IST   |   Update On 2020-09-06 07:02:00 IST
ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று வழங்க கால நீட்டிப்பு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதனால் அமைப்புசாரா நல வாரியங்களில் தங்களது பதிவினை புதுப்பித்தல் செய்வதும் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றினை உரிய காலத்தில் அளிப்பதும் இயலாத நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே ஏப்ரல் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்த நிலையில் சிரமங்களை போக்குவதற்காக 1.3.2020 முதல் 31.12.2020 வரையில் உள்ள பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களின் புதுப்பித்தல் தேதி 31.12.2020 வரை ஒரு தடவையாக தமிழக அரசால் தளர்த்தப்பட்டு உள்ளது. அதே போல் ஓய்வூதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயுள்சான்று வழங்கும் தேதியும் 31.12.2020 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எனவே நலவாரியங்களில் பதிவுபெற்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News