செய்திகள்
வாலாஜாபாத் அருகே மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
வாலாஜாபாத் அருகே மது பாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத்:
வாலாஜாபாத்தை அடுத்த முத்தியால்பேட்டை- களியனூர் சாலையில் உள்ள நத்தப்பேட்டை ரெயில் நிலையம் அருகே வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். காரில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த துரைவேல் (வயது 45), பார்த்திபன் (31), ரமேஷ் (32) ஆகியோரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். 816 மதுபாட்டில்களையும் கைப்பற்றினர்.