செய்திகள்
கைது

குருவிநத்தத்தில் அனுமதியின்றி சாராயக்கடை நடத்தியவர் கைது

Published On 2020-08-16 16:50 IST   |   Update On 2020-08-16 16:50:00 IST
குருவிநத்தத்தில் அனுமதியின்றி சாராயக்கடை நடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:

பாகூரை அடுத்த குருவிநத்தம் ராஜீவ்காந்தி திருமண நிலையம் அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாராயக்கடை இயங்கி வந்தது. குத்தகை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அந்த கடையை தற்போது வேறு ஒருவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். ஆனால் அவர் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றினார்.

இந்தநிலையில் ராஜீவ்காந்தி திருமண மண்டபம் அருகில் முதலில் இயங்கி வந்த கட்டிடத்தில் சிலர் அனுமதி பெறாமல் கடை நடத்தி சாராயம் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு இருந்தவர்கள் தப்பி ஓடினர். அங்கு அனுமதியின்றி சாராயக்கடை நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த பூபதி (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 53 சாராய பாக்கெட்டுகளும், 1,140 ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News