செய்திகள்
பொறையாறு அருகே நண்டலாறு சோதனை சாவடியில் இ-பாஸ் இல்லாமல் வரும் பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பிய காட்சி.

நாகை மாவட்ட எல்லையில் இ-பாஸ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

Published On 2020-08-10 10:00 GMT   |   Update On 2020-08-10 10:00 GMT
நாகை மாவட்ட எல்லையில் இ-பாஸ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு போலீசார் அனுமதி மறுத்து அவர்களை திருப்பி அனுப்பினர்.
பொறையாறு:

ஆகஸ்டு மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்தநிலையில் நாகை மாவட்டம் எல்லை முடிவு, காரைக்கால் மாவட்டம் எல்லை ஆரம்பம் ஆகிய இருமாவட்ட எல்லையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்ட எல்லையான பொறையாறு அருகே நண்டலாறு சோதனை சாவடியில் பொறையாறு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது இ-பாஸ் அனுமதி இல்லாமல் வரும் கனரக வாகனங்கள், கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள், பாதசாரிகள் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இ-பாஸ் இல்லாமல் வரும் பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு சாராயம் வாங்க செல்லும் மதுப்பிரியர்களையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News