செய்திகள்
கைது

அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண்ணாடி உடைப்பு: ஊழியர் மீது தாக்குதல்- 2 பேர் கைது

Published On 2020-08-08 06:31 GMT   |   Update On 2020-08-08 06:31 GMT
அண்டக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியரை தாக்கியதோடு கண்ணாடியை உடைத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்த அண்டக்குளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று மதியம் ரமேஷ் என்பவரை ரத்தக் காயத்துடன், பரவயலை சேர்ந்த தினேஷ் (வயது 20), அய்யப்பன் (40) ஆகியோர் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்ணிலா, உதவி மருத்துவர் பிரியதர்ஷினி ஆகியோர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். இதனால், ரமேசை பார்க்க சற்று தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரும் டாக்டர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். அவர்களை சமாதானபடுத்த முயன்ற மருத்துவ ஊழியர் மாரிமுத்துவை கீழே தள்ளி தாக்கினர். மேலும், உங்களை கொல்லாமல் விடமாட்டோம் என கூறி கற்களை எடுத்து சரமாரியாக மருத்துவமனை மீது வீசினர். இதில், மருத்துவமனையின் கண்ணாடிகள் உடைந்தன.

இதுகுறித்து மருத்துவ அலுவலர் வெண்ணிலா, உடையாளிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், அய்யப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News