செய்திகள்
காய்கறி மார்க்கெட்டுகளில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு

காய்கறி மார்க்கெட்டுகளில் நாராயணசாமி ஆய்வு

Published On 2020-08-03 06:04 GMT   |   Update On 2020-08-03 06:04 GMT
மேட்டுப்பாளையம் மீன் மார்க்கெட், தட்டாஞ்சாவடி தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் நகரப் பகுதியில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழைய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த பொதுமக்கள், வியாபாரிகளிடம் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தினார்.

பின்னர் மரப்பாலம் சந்திப்பு பகுதிக்கு சென்று அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் தற்போது போதிய அளவுக்கு சவாரி கிடைக்கிறதா? என்று நாராயணசாமி கேட்டார். அதற்கு அவர்கள், கொரோனா தொற்று காரணமாக வருவாய் இழந்து பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் அரசு சார்பில் நிவாரணம், ஆட்டோக்களுக்கான வரி, தகுதி சான்றிதழ் போன்றவற்றில் சலுகை தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பயணிகளை முகக் கவசம் அணியச் செய்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர்களிடம் நாராயணசாமி அறிவுறுத்தினார். அதன்பின் மேட்டுப்பாளையம் மீன் மார்க்கெட், தட்டாஞ்சாவடி தற்காலிக காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வந்து இருந்த பொதுமக்கள், வியாபாரிகளிடம் கொரோனா குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Tags:    

Similar News