செய்திகள்
ஊரடங்கை மீறியதாக இதுவரை 16 ஆயிரத்து 463 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 16 ஆயிரத்து 463 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
கொரோனா ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக நேற்று முன்தினம் வரை 16 ஆயிரத்து 463 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 ஆயிரத்து 835 இரு சக்கர வாகனங்களும், கார்கள் உள்பட நான்கு சக்கர வாகனங்கள் 345-ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சட்டவிரோதமாக விற்கப்பட்ட 10 ஆயிரத்து 526 மதுபாட்டில்களும், 2 ஆயிரத்து 672 லிட்டர் சாராயமும், 20 ஆயிரத்து 125 லிட்டர் சாராய ஊறலும் கைப்பற்றப்பட்டுள்ளன.