செய்திகள்
கோப்புபடம்

குன்னூரில் விதிமீறல்: 2 கட்டிடங்களுக்கு சீல் - நகராட்சி அதிகாரிகள் அதிரடி

Published On 2020-07-15 14:06 GMT   |   Update On 2020-07-15 14:06 GMT
குன்னூரில் விதி மீறலில் கட்டப்பட்ட 2 கட்டிடங்களுக்கு நக ராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதால் பருவமழை காலத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது இதனை கருத்தில் சொண்டு 7 மீட்டர் கூடிய உயரம் மற்றும் 1500 அடிக்கு உட்பட்டும் கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் பாறைகள் உடைக்கவும் பொக்லைன் எந்திரம் கொண்டு மண்ணை அகற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விதிகள் மீறப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

குன்னூர் நகராட்சியின் வார்டுகளில் விதிகள் மீறிய மற்றும் அனுமதியற்ற கட்டிடங்கள் கட்டப்படுவதும் நகராட்சி அதிகாரிகளால் இதற்கு நடவடிக்கை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் குன்னூர் மவுண்ட் ரோட்டில் தனியார் கண் ஆஸ்பத்திரி கட்டிடமும், அதன் அருகிலுள்ள தனியார் நிதி நிறுவன கட்டிடமும் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக குன்னூர் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விதி மீறிய கட்டிடங்களுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.மேலும் ஓட்டுப் பட்டரை, உமரி காட்டேஜ்‘ மாடல் அவுஸ் ஆகிய இடங்களில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட 3 கட்டிடங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Tags:    

Similar News