செய்திகள்
கபசுர குடிநீர்

மேலைச்சிவபுரியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

Published On 2020-07-07 19:51 IST   |   Update On 2020-07-07 19:51:00 IST
பொன்னமராவதி ஒன்றியம் மேலைச்சிவபுரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பொன்னமராவதி:

பொன்னமராவதி ஒன்றியம் மேலைச்சிவபுரி ஊராட்சியில் பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கொரோனாவில் இருந்து விடுபடவும் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது. முகாமிற்கு ராயல் லயன்ஸ் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ரத்தினம், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது. முகாமானது தொடர்ந்து இன்றும்(செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடக்கிறது.


Similar News