செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ்காரர் உள்பட 33 பேருக்கு கொரோனா

Published On 2020-06-27 13:29 IST   |   Update On 2020-06-27 13:29:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உள்ள முதல் தளத்தில் உள்ள அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறை முன்பு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிவகங்கை நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் சிவகங்கை பகுதியில் 4 ஆண், 2 பெண், தேவகோட்டை பகுதியில் தலைமை காவலர், லயன்ஸ் சங்க தலைவர் உள்பட 5 பேர், 3 பெண், கள்ளிகுடியில் ஒரு ஆண், சென்னையை சேர்ந்த 2 ஆண், 2 பெண், காளையார்கோவிலில் ஒரு பெண், சிங்கம்புணரியில் ஒரு பெண், காரைக்குடியில் 3 ஆண், ஒரு பெண், திருப்புவனத்தில் ஒரு ஆண், 3 பெண், மானாமதுரையில் ஒரு ஆண், ஒரு பெண், மழவராயனேந்தலில் ஒரு ஆண், திருப்பத்தூரில் ஒரு ஆண், ஒரு பெண் உள்பட 33 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று 29 பேர் பூரண குணமடைந்தனர். அவர் களை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன், சமூக ஆர்வலர் அயோத்தி மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

Similar News