செய்திகள்
சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பீதியால் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பீதியால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி:
சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பீதியால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் உள்ளது. நகர மக்கள் தங்களது கோரிக்கைகளை கூறி நிவாரணம் பெறவும், பிறப்பு, இறப்பு தகவல்களை பதிவு செய்து உரிய சான்றிதழ்களை பெறவும் இந்த அலுவலகத்துக்கு வருவது உண்டு. மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செய்யப்படும் வளர்ச்சி பணிகள் குறித்தும், அது தொடர்பான நபர்கள் கமிஷனர், என்ஜினீயர் ஆகியோரை சந்தித்து உரிய ஆலோசனை கேட்டு செல்வது உண்டு.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பீதியால் சிவகாசி நகராட்சி அலுவலகத்துக்குள் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி அலுவலகத்துக்குள் செல்ல 3 வாசல்கள் இருந்த நிலையில் 2 வாசல்கள் எப்போதும் பூட்டியே இருக்கிறது.
நகராட்சி சுகாதார அலுவலர் அறை உள்ள பகுதியில் இருக்கும் வாசல் மட்டும் திறந்து இருந்த நிலையில் தற்போது அந்த வாசலும் பூட்டப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க வசதியாக இந்த புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக அங்கு இருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி நிவாரணம் பெறவே நகராட்சி அலுவலகத்துக்கு வருவது உண்டு. முக்கிய பணிகளுக்காகவும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து உரிய ஆலோசனை பெறுவது வழக்கம். இந்தநிலையில் நகராட்சி நிர்வாகத்தின் இந்த புதிய முடிவு பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி நிவாரணம் பெறவும், அதிகாரிகளை சந்திக்கவும் தடையாக உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்றால் நகராட்சி சார்பில் கிருமிநாசினி வைக்கப்பட்டு அதை பொதுமக்கள் பயன்படுத்த வற்புறுத்த வேண்டும். நகராட்சி அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க சொல்ல வேண்டும். அதை தவிர்த்து நகராட்சி அலுவலகத்தை பூட்டி வைப்பது ஏற்புடையது அல்ல.
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் வரிசையில் நிற்க அனுமதிக்கும் அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்துக்குள் பொதுமக்கள் வர தடைவிதித்து இருப்பது கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர் மைக்கேல் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் விசாரித்து உரிய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.